இந்தியா : சர்வதேச விமானங்கள் அனைத்தும் இந்தியாவிற்கு வர தற்காலிகத் தடை..!!! கொரோனா எதிரொலி..!!!
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பையொட்டி பல நடவடிக்கைகள் எடுத்து வரும் பட்சத்தில், தற்பொழுது சர்வதேச விமானங்கள் இந்தியாவிற்கு வர ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பஞ்சாபில் 70 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயந்துள்ளது. மேலும், இன்று தமிழகத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 21 வயதான இளைஞர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்பொழுது ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 22 முதல் ஒரு வாரத்திற்கு திட்டமிடப்பட்ட அனைத்து சர்வதேச பயணிகள் விமானங்களையும் ஒரு வாரத்திற்கு தடை செய்வதாக இந்திய அரசு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. இதில் நாட்டிற்குள் நுழைய விரும்பும் பெரும்பான்மையான வெளிநாட்டினருக்கான விசாக்களை இந்தியா ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
65 வயதிற்கு மேற்பட்ட குடிமக்கள், பொது பிரதிநிதிகள் அல்லது மருத்துவர்கள் அல்லது அரசு ஊழியர்களாக இல்லாவிட்டால் அவர்கள் வீட்டில் தங்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், அத்தியாவசிய பணி தவிர மற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeமாணவர்கள், நோயாளிகள் மற்றும் சிறப்பு திறன் கொண்டவர்கள் தவிர அனைத்து சலுகை பயணங்களையும் நிறுத்தி வைக்க ரயில்வே மற்றும் விமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்தியா முழுவதும் உள்ள 168 ரயில்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மத்திய அரசுப்பணியாளர்களில் 50 சதவிகிதம் பேர், வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.