வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா செல்பவர்களுக்கு கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தல்..!!! ஐரோப்பாவிலிருந்து இந்தியா செல்ல தடை…!!! கொரோனா எதிரொலி..!!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையங்களிலும் பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தற்பொழுது இந்தியா, வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை அறிவுறுத்தியுள்ளது.
Expanding compulsory quarantine for a minimum period of 14 days for passengers coming from/transiting through #UAE, #Qatar, #Oman, and #Kuwait. This will come into effect from 1200 GMT on 18th March 2020 at the port of first departure.
— Ministry of Health (@MoHFW_INDIA) March 16, 2020
வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய 4 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது மார்ச் 18 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கு மார்ச் 18 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தடை இந்த மாதம் இறுதி வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
Travel of passengers from member countries of the #EuropeanUnion, the #EuropeanFreeTradeAssociation, #Turkey and #UnitedKingdom to #India is prohibited with effect from 18th March 2020.
— Ministry of Health (@MoHFW_INDIA) March 16, 2020
கொரோனா வைரஸிற்கான தடுப்பு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.