கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு…!!!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்கெனவே ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் தற்பொழுது மேலும் ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த 68 வயதான முதிய பெண்மணி ஒருவர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து தற்பொழுது உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது வரை இந்தியாவில் 80 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட வண்ணமே உள்ளன. பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரிதும் மக்கள் கூடும் நிகழ்வுகள் பலவற்றிற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸால் இரண்டாவதாக ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் சில தினங்களுக்கு முன் உயிரிழந்துள்ள நிலையில் அவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுதான் உயிரிழந்தார் என்பதை வியாழக்கிழமை கர்நாடக சுகாதார ஆணையம் உறுதி செய்தது. இதனை தொடர்ந்து மேலும் ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்தது இந்தியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.