அமீரகத்தில் இதுவரையிலும் 2,20,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை…!!! MoHAP அறிவிப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸிற்காக இதுவரை 2,20,000 க்கும் மேற்பட்ட ஆய்வக சோதனைகள் நடத்தியுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு மில்லியன் மக்களுக்கு 22,900க்கும் பேர் என்ற வீதத்தின் அடிப்படையில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. இது உலகின் பல்வேறு நாடுகள் மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனையின் இரண்டாவது மிக உயர்ந்த சோதனை அடர்த்தியைக் கொண்ட பரிசோதனை வீதமாகும்.
பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த புள்ளிவிவரங்கள் தேசிய சுகாதார அமைப்பின் செயல்திறன் மற்றும் வைரஸை சமாளிக்க நாட்டின் தயார்நிலைக்கு ஒரு சான்றாக விளங்குகிறது.