அமீரகம் : பூங்கா மற்றும் நைட் கிளப்களை தற்காலிகமாக மூட உத்தரவு..!!! கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!!!!
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மற்றும் அபுதாபியில் இருக்கும் பல பொது பூங்காக்கள் மற்றும் நைட் கிளப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொடர்பான பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மார்ச் இறுதி வரை அபுதாபியில் உள்ள இரவு விடுதிகள் மற்றும் சுற்றுலா உணவகங்கள் உடனடியாக மூடப்படும் என்று கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜா முனிசிபாலிட்டி வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்ட ஒரு ட்வீட்டில், ஷார்ஜாவில் பல பூங்காக்கள் மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதில் ஷார்ஜா நேஷனல் பார்க், அல் மகாட்டா பார்க், அபு ஷகரா பார்க், அல் ஃபயா 1 & 2 பார்க், அல் நாதா பார்க், அல் மம்சார் பார்க், அல் சஃபியா, அல் நஸிரியா பார்க், அல் மனக் மற்றும் அல் பிஷ்ட் பார்க் போன்றவை அடங்கும்.
கொரோனா வைரசிற்கான தடுப்பு நடவடிக்கையாக பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அபுதாபி மற்றும் துபாயில் ஹோட்டல்கள் மற்றும் கஃபே (cafe)க்களில் ஷிஷாவுக்கு(shisha) தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.