அமீரக செய்திகள்

அமீரகத்தில் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி..!!! அபராத தொகை செலுத்தாமலே வாகன பதிவு அட்டையை புதுப்பித்துக்கொள்ளலாம்..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை, வாகன உரிமையாளர்கள் காலாவதியான தங்கள் வாகனங்களின் பதிவு அட்டைகளை (Vehicle Registration Card) புதுப்பிக்க சேவை விநியோக மையத்திற்கு (Vehicle Inspection Center) செல்ல தேவையில்லை என்று ட்விட்டரில் அறிவித்துள்ளது. கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறியுள்ளது.

இது பற்றி அமைச்சகம் தந்து சோசியல் மீடியா கணக்குகளில் “சேவை வழங்கல் மையங்களைப் பார்வையிடத் தேவையில்லாமல் காலாவதியான வாகனங்களின் பதிவு அட்டைகளைப் புதுப்பித்தல்” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளது.

“அனைத்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்திற்கு ஏற்ப, மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதாவது ஜூன் மாதம் வரையிலும் சேவை விநியோக மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமின்றி காலாவதியான வாகனங்களின் பதிவு அட்டைகள் முழுமையாக புதுப்பித்துக்கொள்ளலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் “போக்குவரத்து அபராதம் செலுத்துதல் (Traffic Fines), வாகனத்தை ஆய்வு செய்தல் (Vehicle Inspection Center) மற்றும் ஒழுங்கீனமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு வழங்கப்படும் கரும் புள்ளிகள் (Traffic Points) போன்றவற்றை சரி செய்ய வேண்டிய அவசியமின்றி வாடிக்கையாளர்கள் இந்த நடவடிக்கையிலிருந்து பயனடையலாம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!