யுஏஇ, குவைத், பஹ்ரைன் நாட்டுப் பயணிகள் சவுதி அரேபியாவிற்குள் நுழைய தடை???
ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிடம் இருந்து சாலை வழியாக வரும் வணிகரீதியிலான வாகனங்கள் (commercial trucks) மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் என்று சவுதி அரேபியா சனிக்கிழமை அறிவித்தது.
First: Entry into the Kingdom by arrivals from United Arab Emirates, the State of Kuwait and the Kingdom of Bahrain will be temporarily restricted to airports only.#SPAGOV
— SPAENG (@Spa_Eng) March 7, 2020
கொரோனா வைரஸின் பரவலை எதிர்த்து சவுதி அரேபியா மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, மூன்று நாடுகளிலிருந்து வரும் பயணிகள் சவுதியில் நுழைவதற்கு அங்குள்ள மூன்று விமான நிலையங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் செய்தி நிறுவனம் SPA தெரிவித்துள்ளது.
மூன்று விமான நிலையங்களாவன :
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம்
ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்அஸீஸ் சர்வதேச விமான நிலையம்
தமாமில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம்
மேலும், வணிக ரீதியிலான வாகனங்கள் மட்டுமே தரை வழியாக சவுதிஅரேபியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேற்கூறிய விமான நிலையங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்றும், இந்த நடைமுறைகள் லாரி ஓட்டுநர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கும் பொருந்தும் என்றும் சவுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதி சுகாதார அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட, கொரோனா வைரஸ் பரவக்கூடும் வகையில் உள்ள எந்த நாட்டிலிருந்தும், புதிய விசா அல்லது முன்பே இருக்கும் செல்லுபடியாகும் விசாவைப் பயன்படுத்தி நாட்டிற்கு வர விரும்புவோர் அனைவரும், தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக PCR(Polymerase Chain Reaction) எனும் ஆய்வக சோதனை சான்றிதழை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
சவுதி நாட்டிற்குள் நுழைவதற்கு முன்னர், அந்த நாடுகளில் 14 நாட்கள் வசித்த எவருக்கும் இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விமான நிறுவனங்களும் ஆய்வக சோதனையின் நம்பகத்தன்மையை உறுதிசெய்து, பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்னுள்ள 24 மணி நேரத்திற்குள் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவிப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.