அமீரகத்தில் தொலைதூரக்கல்விக்காக பிரத்யேக APPS…!!! TRA அசத்தல்..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து கல்விநிறுவனங்களும் தொலைதூரக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும், பல அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை (Work From Home) செய்ய உத்தரவிட்டுள்ளன.
இதனடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecommunications Regulatory Authority-TRA) நாட்டின் தொலைதூரக் கல்வி மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இணையத்தில் இனி ஐந்து அப்ளிகேஷன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் ஃபைன்டைம் (Microsoft FindTime), ஜூம் (Zoom) மற்றும் பிளாக்போர்டு (Blackboard) ஆகிய அப்ளிகேஷன்கள் இதிலடங்கும். இவை நாட்டின் அனைத்து நெட்வொர்க்குகளிலும் எளிதாகக் கிடைக்கின்றன. வணிகத்திற்கான மைக்ரோசாஃப்ட் ஸ்கைப் (Microsoft Skype for Business) மற்றும் கூகிள் ஹேங்கவுட் (Google Hangout) ஆகியவை நிலையான இணைய நெட்வொர்க்குகளுடன் பொருந்தக்கூடிய வகையில் உள்ளது.
இதன் மூலம் நாட்டில் கல்விநிறுவனங்கள் மேற்கொள்ளும் தொலைதூரக் கல்விமுறைக்கும் (Distance Learning), அரசு மற்றும் தனியார் தொழிலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டில் இருந்த படியே வேலை செய்யும் முறைக்கும் (Work From Home) மிக உதவிகரமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த அப்ளிகேஷன்கள் பயன்பாட்டை அவ்வப்போது மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.