அமீரக செய்திகள்

மார்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு ரெசிடென்ஸ் விசா, எமிரேட்ஸ் ஐடி காலாவதியானவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெசிடென்ஸ் விசா (Residence Visa) மற்றும் எமிரேட்ஸ் ஐடி (Emirates ID) காலாவதியானவர்கள் அதனை புதுப்பித்துக்கொள்ள கூடுதல் கட்டணம் ஏதும் இல்லாமல் மூன்று மாத காலத்திற்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமீரகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவுவதையொட்டி எடுக்கப்பட்ட தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, மார்ச் 1, 2020 அன்று முதல் காலாவதியான ரெசிடென்ஸ் விசாக்களை வைத்திருப்பவர்கள் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தாமல் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் தங்கள் விசாக்களைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். மேலும் தற்போதைய நிலைமைகளின் கீழ் ஏற்படும் எந்தவொரு நிதி முறைகேடுகளிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவானது, அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட்டில் வந்தவர்களின் நடைமுறைகளை எளிதாக்குவது, அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வது மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகளில் அரசாங்கத்தின் சார்பாக மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தொடர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக அமீரக செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நடைமுறை, 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கி மூன்று மாதங்கள் அதாவது ஜூன் மாதம் வரையிலும் அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் காலாவதியான விசாக்களை புதுப்பிக்கும்போது, அடையாளம் மற்றும் குடியிருமைக்கான மத்திய ஆணையம் (Federal Authority for Identity and Nationality) வழங்கிய சேவைகளை மீறியதற்காக வசூலிக்கப்படும் அபாரதங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என அமைச்சரவை தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலைகளில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் நீதித்துறை சார்ந்த பரிவர்த்தனைகளை (Judicial Transactions) முடிக்க உதவுவதற்கும், நீதித்துறை அதிகாரிகளை பின்தொடரும் வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்கும், நோட்டரி பொதுப்பணி சேவைகளுக்காக (Notary Public Works) தாற்காலிகமாக டிஜிட்டல் பரிவர்த்தனை தொழில்நுட்பத்திற்கு (Digital Transaction Technology) உரிமம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், மார்ச் 1, 2020 அன்று முதல் காலாவதியாகும் அனைத்து வகையான அரசாங்க சேவைகளுக்கும் ஏப்ரல் 1 முதல் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் புதுப்பித்துக்கொள்ளவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ஆவணங்கள்(Documents), அனுமதி பாத்திரங்கள் (Permits), உரிமங்கள் (Licences), வணிக பதிவேடுகள் (Commercial Registers) மற்றும் பல்வேறான மத்திய அரசு சேவைகளையும் புதுப்பிக்க இந்த முடிவு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!