UAE CORONA UPDATE : ஒரே நாளில் 150 பேர் பாதிப்பு..!!! இருவர் பலி..!!! பாதிக்கப்பட்டோர் மொத்தம் 814 பேர்..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸிற்கு இன்று (ஏப்ரல் 1,2020) புதிதாக 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரே நாளில் 814 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பிற்கு இன்று கூடுதலாக இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் 62 வயதுடைய ஆசியாவை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் 78 வயதுடைய அரபு நாட்டை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இதய சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இறந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 8 பேர் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இருந்து பரவியதாகத் தெரிகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததே மேற்கொண்டு பரவக் காரணமாக அமைந்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவகாகவும், அவர்கள் அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The latest update of #Coronavirus (#COVID19) in the #UAE#StayHome pic.twitter.com/0nTvU5aBuM
— هيئة الصحة بدبي (@DHA_Dubai) April 1, 2020
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe