அபுதாபியில் பேருந்து சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தம்..!! அபுதாபி முனிசிபாலிடி மற்றும் போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் வியாழக்கிழமை (நாளை, ஏப்ரல் 23,2020) முதல் அடுத்த மறு அறிவிப்பு வரும் வரை பொது பேருந்து சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி முனிசிபாலிடி மற்றும் போக்குவரத்துத் துறை (Department of Municipalities and Transport) இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, “பொது போக்குவரத்துக்கு பயன்படும் பேருந்து சேவைகள் அனைத்தும் வியாழக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.
எனினும், மருத்துவ துறை சார்ந்த ஊழியர்களுக்காக தொடங்கப்பட்ட இலவச பேருந்து சேவைகள் (free bus on-demand service) தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதத்தில் துபாய், அமீரகத்தின் மற்ற பகுதிகளான அபுதாபி, ஷார்ஜா போன்ற இடங்களுக்கு இன்டர்சிட்டி பஸ் சேவைகளை (Intercity Bus Service) நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
تعلن دائرة البلديات والنقل عن إيقاف خدمـة حافلات النقل العام في إمارة أبوظبي اعتباراً من يوم غد وحتى إشعار آخر. pic.twitter.com/Rbq87HLQJV
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) April 22, 2020