துபாயில் மெட்ரோ, பஸ், பார்க்கிங் கட்டணம் உள்ளிட்டவை மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் இயக்க கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் ஒரு பகுதியாக துபாய் மெட்ரோ சேவையானது மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று, துபாய் மெட்ரோ சேவையானது ஒரு வாரத்திற்குள் தொடங்கப்படும் என்றும், மெட்ரோ சேவையானது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என்றும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை முதல் மெட்ரோ உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் காலை 7 மணி முதல் தொடங்கி இரவு 11 மணி வரை இயங்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துபாய் மெட்ரோவின் ஒவ்வொரு கேபினிலும் குறிப்பிட்ட அளவு பயணிகள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படும் என்றும் அனைத்து பயணிகளும் முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்
- துபாய் மெட்ரோ உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் ஏப்ரல் முதல் தொடங்கும் என்றும் போக்குவரத்து சேவைகளுக்கு வழக்கமான கட்டணம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரெட் மற்றும் கிரீன் வழித்தடங்களில் இயக்கப்படும் துபாய் மெட்ரோ சேவை நேரம் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையும், வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையிலும் இருக்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து பயணிகளும் மெட்ரோ, டாக்ஸி, பஸ் போன்ற பொது போக்குவரத்தில் வேலை செய்பவர்களும் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- ஒரு டாக்ஸியில் பயணிக்க இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
- வாட்டர் டாக்ஸி, டிராம், லிமோசின் போன்ற சேவைகளுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.
#DubaiMetro resumes its daily journeys to secure necessary trips starting Sunday, 26 April between 7 AM and11 PM Saturday to Thursday, and between 10 AM to 11 PM every Friday. pic.twitter.com/vAqFuBBIV8
— RTA (@rta_dubai) April 23, 2020
பார்க்கிங் கட்டணம்
வரும் ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, பொது வாகன நிறுத்தம் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும், இரவு 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையிலும் கட்டண சேவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#RTA announced that the public parking fees will resume back to normal, starting from Sunday, April 26 from 8 AM until 6 PM, and the second period from 8 PM until 12 midnight.#RTA pic.twitter.com/Mn2o0o2hpb
— RTA (@rta_dubai) April 23, 2020
பொது பேருந்துகளைப் பொறுத்தவரை, அவை காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை சாதாரண நேர அட்டவணைகளில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் 13 பேருந்து வழித்தடங்கள் (8, 10, 12, A13, 17, 24, C01, C07, F18, F21, F34, F43 மற்றும் X23) இரவு 10.00 மணி முதல் 6.00 மணி வரை சேவைகளை வழங்கும். மேலும், இந்த பேருந்துகள் இரவு 10.00 மணி முதல் 6.00 மணி வரை அவசிய தேவைக்காக (மருத்துவமனைகளுக்கு மட்டும் ) செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் 19 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகளை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் RTA எடுத்துள்ளது. பேருந்துகள் மற்றும் டாக்சிகளும் தினமும் சுத்திகரிக்கப்படுவதாக RTA தெரிவித்துள்ளது.
To public bus users across #Dubai, please be informed that effective Sunday, 26 April, buses will be fully operational from 6 AM until 10 PM along with essential trips between 10 PM and 6 AM (to hospitals only). Intercity buses are suspended until further notice.#RTA pic.twitter.com/yQiIFXLg38
— RTA (@rta_dubai) April 23, 2020