அமீரக செய்திகள்

காவல்துறை கண்காணிப்பு வளையத்தில் துபாய்..!! அவசியமின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை..!!

துபாயில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 24 மணி நேர தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் போது அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்காத நபர்களை அடையாளம் காண துபாய் போலீஸ் ரோந்து, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரேடார்கள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துபாய் காவல்துறையின் செயல்பாட்டுத் துறை இயக்குநர் மேஜர் ஜெனரல் கமல் பட்டி அல் சுவைதி (Major General Kamel Butti Al Suwaidi) இது பற்றி கூறுகையில், துபாயில் கொரோனா வைரஸ்சிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருவதாகவும், சனிக்கிழமை இரவு 8 மணி தொடங்கி இரண்டு வாரங்களுக்கு முழுநேரமும் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த இடைப்பட்ட காலங்களில் பொது மக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து துபாயில் தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் வழிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதை உறுதிப்படுத்த போலீஸ் ரோந்து, கேமராக்கள் மற்றும் ரேடார்கள் பயன்படுத்தப்படும் என்றும் விதிமுறைகளை மீறி வெளியில் நடமாடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

துபாயின் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை குழு (Dubai’s Supreme Committee of Crisis and Disaster Management), கொரோனா வைரஸிற்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் (Command and Control Centre for Combating COVID-19) இணைந்து, ஏப்ரல் 4, 2020 சனிக்கிழமை முதல், துபாயின் அனைத்து பகுதிகளிலும் கொரோனாவை எதிர்ப்பதற்கான சுத்திகரிப்பு திட்டத்தை (Sterlisation campaign) 24 மணி நேரத்திற்கு விரிவுபடுத்துவதாக அறிவித்திருந்தது. மேலும், சமூகத்தின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்க மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளையும் குழு அறிவித்துள்ளது.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இந்த காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் தங்க வேண்டும் என்றும் யூனியன் கூட்டுறவு கடைகள் (Union Co-operative) மற்றும் பல்பொருள் அங்காடிகள் (Super Market) போன்ற உணவு சில்லறை விற்பனை நிலையங்களும், மருந்தகங்கள் மற்றும் உணவு மற்றும் மருந்து விநியோகங்களும் போன்றவைமட்டுமே வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசரநிலைகளுக்கு 999 என்ற எண்ணையும் மற்றும் அவசரம் அல்லாத தேவைகளுக்கு 901 என்ற எண்ணையும் அழைத்து உதவி கோரலாம் என துபாய் காவல்துறை அறிவித்துள்ளது. கூடுதலாக, இக்காலங்களில் ஏதேனும் விதிமீறல்களை பற்றி புகார் செய்ய விரும்பினால் E-crime மற்றும் Police Eye போன்ற தளத்தின் மூலமாக தெரிவிக்கலாம் என்றும் துபாய் போலீஸ் குறிப்பிட்டுள்ளது.

 

source : Gulf News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!