வளைகுடா செய்திகள்

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் ஏப்ரல் 16 முதல் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவர்..!! குவைத் உள்துறை அமைச்சகம் தகவல்..!!

குவைத் உள்துறை அமைச்சகம (Kuwait Ministry of Interior) நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 9, 2020) பங்களாதேஷ் மற்றும் இந்திய நாட்டை சேர்ந்த, குவைத் இருப்பிட விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி இருக்கக்கூடிய குடியிருப்பாளர்கள் அனைவரையும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த குடியிருப்பாளர்களை நாடுகடத்தும் செயல்முறை நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 11, 2020) முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்திய நாட்டை சேர்ந்தவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை வரும் ஏப்ரல் 16, 2020 முதல் ஏப்ரல் 20, 2020 வரையிலும் நான்கு நாட்களுக்கு நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு, எந்தவொரு அபராதமும் விதிக்கப்படாமலும், அவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான விமான பயணத்திற்கு எந்த கட்டணமும் செலுத்தாமலும் சட்டவிரோதமாக வசிப்பவர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடர்பான அமைச்சரவை ஆணையின்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு மற்றும் பாதுகாப்பு ஊடகத் துறை (Ministry’s public relations and security media department) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பி அனுப்பப்படுபவர்கள் சம்பத்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் குவைத் நாட்டிற்கு திரும்பி வர வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முற்படும் குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக தங்குவதற்கென இருப்பிடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்களுக்கு, பகுதி 1, ஸ்ட்ரீட் 76 ல் அமைந்துள்ள அல்-ஃபர்வானியா தொடக்கப்பள்ளியும் (பெண்கள்), பெண்களுக்கு பகுதி 1, ஸ்ட்ரீட் 122 ல் அமைந்துள்ள அல்-முத்தன்னா தொடக்கப்பள்ளியும் (சிறுவர்கள்) நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வருகைக்காக காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலும் இந்த பள்ளிகள் திறந்திருக்கும் என்றும் அமைச்சகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!