அமீரக செய்திகள்

அமீரகத்தில் உள்ள இந்தியர்களுக்கு உணவு, மருத்துவ உதவிகளை வழங்கி வரும் இந்திய தூதரகங்கள்..!! தேவையுடையவர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிப்பு..!!

கொரோனாவின் தாக்கத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கள் வேலையை இழந்தும் வேலை கிடைக்காமலும் போதிய வருமானம் இன்றி உணவுக்காகவும் இன்னபிற அத்தியாவசிய தேவைகளுக்காகவும் போராடும் நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகங்கள் நேரடியாகவும் மற்றும் சமூகத்தின் ஆதரவுடனும் இலவசமாக உணவுகளை வழங்கி வருகின்றன.

அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம், உணவின்றி தவிக்கும் இந்தியர்கள் இந்த திட்டத்தின் மூலமாக உதவியை பெறுவதற்கு, தங்களின் விபரங்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இது பற்றி இந்திய துணை தூதரகம் சார்பாக விபுல் கடந்த வியாழக்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட செய்தியின் படி, “பல சமூக உறுப்பினர்கள் உணவு தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தூதரகம் இவற்றை ஒருங்கிணைத்து தேவை உடையவர்களுக்கு உதவி செய்யும். மேலும் உதவி தேவைப்படுபவர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் கோரிக்கைகளை அனுப்பலாம். செயலாற்றுவதற்கு போதிய நேரம் கொடுங்கள்” என்று விபுல் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் இந்தியர்களுக்கு உணவு விநியோகம் செய்யும் புகைப்படங்களை இந்திய துணை தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

புகைப்படத்துடன் கூடிய செய்தியில், அமீரகத்தில் இருக்கும் இந்திய துணைத் தூதரகம் கடந்த பல நாட்களாக தேவைப்படும் இந்தியர்களுக்கு நேரடியாகவும், சமூக அமைப்புகள் மற்றும் இந்திய சங்கங்கள் மூலமாகவும் உணவு வழங்கி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் 1500 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று சோனாபூர் (320), ஷார்ஜா (200), அஜ்மான் (70) மற்றும் பர்துபாய், கராமா மற்றும் அல் குசைஸ் (சுமார் 100 பேர்) என பல்வேறு இடங்களில் வசிக்கும் இந்தியர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவால் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் துபாய் மற்றும் அமீரகத்தின் வடக்கு பகுதிகளில் வசிக்கக்கூடிய இந்தியர்களுக்கு, கடந்த சில வாரங்களில் மட்டும் 3500 உணவு பொட்டலங்கள் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களும், தொழிலாளர்களும் பயனடைந்துள்ளனர் எனவும் விபுல் கூறியுள்ளார்.

இந்திய தூதரகத்தின் இந்த உதவியை பெறுவது பற்றி நீரஜ் அகர்வால் கூறியதாவது, உணவு தேவைப்படுபவர்கள் தங்களின் பெயர், பாஸ்போர்ட் எண், மொபைல் எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்துமாறு கூறினார்.

“உதவியை கூறும் தொழிலாளர்கள் தங்களின் தாய் மொழியில் எழுதியும் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். குழுவாக இருப்பவர்கள் தங்களின் குழுவில் இருக்கும் அனைவரின் விபரங்களையும் குறிப்பிட்டு ஒரே மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். தொழிலாளர்கள் மட்டுமின்றி உதவி தேவைப்படும் குடும்பங்களும் மின்னஞ்சல் அனுப்பலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், இத்திட்டத்தின் மூலம் மருத்துவ உதவி கோரிய 36 இந்தியர்களுக்கு மருந்துகளை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். மருந்துகள் ஒரு சோதனை அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகின்றன. எனினும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும் உணவு தேவைப்படும் இந்தியர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விபரங்களை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

“அபுதாபியின் முஸாஃபா பகுதியில் உள்ள ACTCO தொழிலாளர் முகாமில் 59 இந்திய தொழிலாளர்களுக்கு தூதரக அதிகாரிகள் ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களை இன்று ஒப்படைத்தனர். இது மார்ச் 25 அன்று அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவியின் தொடர்ச்சியாக இன்றும் வழங்கப்பட்டுள்ளது” என இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிபிடகக்கது.

உதவி தேவைப்படுபவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்…

இந்திய துணை தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி
உணவு தேவைக்கு : [email protected]
மருத்துவ உதவிக்கு : [email protected]

இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!