அமீரக செய்திகள்

அமீரகத்தில் கொரோனாவின் தாக்கத்தால் வேலை இழந்தவர்களுக்கு சில புதிய வேலை வாய்ப்புகள்..!!! அமைச்சகம் அறிவிப்பு..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி பலரும் தங்கள் வேலையில் பாதிப்பை கண்டுள்ளனர். சிலர் தங்களுடைய வேலையை கூட இழந்திருக்க வாய்ப்புண்டு. அவ்வாறு வேலை இழந்து அல்லது புதிய வேலை தேடும் நபர்களுக்கு உதவும்வண்ணம் அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (Ministry of Human Resources and Emiratisation) “விர்ச்சுவல் லேபர் மார்க்கெட்” (Virtual Labour Market) என்ற ஒரு தளத்தில் பல்வேறு வகையான வேலைகளை விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த தளத்தில் பல்வேறு பிரிவில் பல வகையான வேலைகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல காலியிடங்கள் தற்போதைய கொரோனாவின் தாக்கத்தால் வேலையில்லாமல் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்ட வெளிநாட்டினரை உதவி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தின் மூலம் கிடைக்கும் வேலைகளில் 3,000 முதல் 10,000 திர்ஹம் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கிடைக்கும் வேலைகளில் சில தற்காலிகமான வேலைகளாகவோ அல்லது ஆறு மாதங்கள் வரை பார்க்கக்கூடிய வேலைகளாகவோ இருக்கலாம். மீதமுள்ளவை நிரந்தரமான வேலை மற்றும் மாற்று தொழில் வாய்ப்புகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தருணத்தில் கிடைக்கும் பெரும்பாலான வேலைகள் கட்டுமானம் (construction), உணவுத் துறை (food sector), மின் வணிகம் (e-commerce) மற்றும் தொலைத்தொடர்பு (telecommunication) ஆகிய துறைகளை சார்ந்த வேலைகளாக இருக்கிறது. இந்த தளத்தில் வேலை செய்ய விரும்பக்கூடியவர்கள் தங்கள் விபரங்களை https://careers.mohre.gov.ae/ar என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!