அமீரகத்தில் பப்ளிக் செக்டர்க்கான ரமலான் மாத வேலை நேரம் அறிவிப்பு..!!!

உலகம் முழுவதிலும் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கும் இஸ்லாமியர்களின் புனித மாதமாக அறியப்படும் ரமலான் மாதம் தொடங்குவதையொட்டி, அமீரக அரசு சார்ந்த துறைகளுக்கு வேலை நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அதாவது 5 மணி நேரங்கள் என்று மனித வளங்களுக்கான மத்திய ஆணையம் (Federal Authority for Government Human Resources) இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19, 2020) வெளியிட்டுள்ள செய்தியில் அறிவித்துள்ளது.
எனினும் வேலையை பொறுத்து கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டிய குறிப்பிட்ட துறைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட ரமலான் மாதம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
الهيئة: مواعيد الدوام الرسمي في شهر #رمضان المبارك تبدأ من الساعة التاسعة صباحاً وحتى الثانية بعد الظهر، وعلى الوزارات والجهات الاتحادية مراعاة من تقتضي طبيعة عملهم خلاف ذلك، والالتزام بالأحكام الواردة في كافة القرارات والتعاميم ذات الصلة بالعمل عن بعد في الظروف الطارئة. pic.twitter.com/NIRNblhbzm
— FAHR (@FAHR_UAE) April 19, 2020