தமிழகத்தில் தொடங்கியது கொரோனாவிற்கான ரேபிட் கிட் பரிசோதனை..!!!
சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரேபிட் பரிசோதனை கிட் (rapid testing kits) தமிழகத்திற்கு வந்ததையடுத்து முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, சேலம் போன்ற நகரங்களில் ரேபிட் கிட் பரிசோதனை நடைபெற தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு இருக்கும் என சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இந்த ரேபிட் கிட் கருவி மூலம் கொரோனாவிற்கான பரிசோதனை தொடங்கியுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டவர்களின் இரத்த மாதிரியை எடுத்து ரேபிட் கிட்டில் வைக்கும் போது ஒரு கோடு விழுந்தால் அவருக்கு நெகடிவ் எனவும், இரண்டு கோடுகள் விழுந்தால் அவருக்கு பாசிட்டிவ் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் பாசிட்டிவ் முடிவை பெறுபவர்கள் அடுத்த கட்ட சோதனையாக PCR மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த ரேபிட் கிட்டின் மூலம் விரைவிலேயே ஒரு நபருக்கு தொற்று இருக்கிறதா எனக் கண்டறிய பெரிதும் உதவிகரமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் 30 நிமிடங்களிலேயே ரிசல்ட்டை தெரிந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதுவரையிலும் தமிழகத்தில் 1200 க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 15 பேர் கொரோனவினால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.