அமீரக செய்திகள்

அமீரகத்தில் ’10 மில்லியன் உணவு’ பிரச்சாரத்தை தொடங்கிய துபாய் மன்னர்..!! கொரோனாவால் பாதிப்படைந்த குடும்பங்கள், தனிநபர்கள் பயன்பெற நடவடிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும் மற்றும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum) அவர்களின் உத்தரவின் பேரில், ஐக்கிய அரபு அமீரக உணவு வங்கியின் அறங்காவலர் குழுவின் தலைவரும் ஷேக் முகமது அவர்களின் மனைவியுமான மாண்புமிகு ஷேகா ஹிந்த் பின்த் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் (Her Highness Sheikha Hind bint Maktoum bin Juma Al Maktoum), கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் தனிநபர்களை ஆதரிக்கும் விதமாக “10 மில்லியன் உணவுகள் (10 million meals)” எனும் நாட்டின் மிகப்பெரிய உணவு விநியோக பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

புனித ரமலான் மாதத்தின் அணுகுமுறையுடன் ஒத்துப்போகின்ற நாடு தழுவிய இந்த மிகப்பெரிய உணவு விநியோக பிரச்சாரத்தின் மூலம், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மற்றும் வேலை இழந்த, குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்கள் உள்ளிட்டோருக்கு தேவையான சமைத்த உணவு அல்லது உணவுப் பொருட்கள் மற்றும் பார்சல்களை விநியோகிக்க பொதுமக்கள், நிறுவனங்கள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் மற்றும் மக்களை நேசிக்கும் தன்மையுடையவர்கள் நிதி உதவியை நன்கொடையாக வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸிற்கு எதிரான சமூக ஒற்றுமை நிதி ஆணையத்துடன் (Social Solidarity Fund Against Covid-19) இணைந்து முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குளோபல் இனிசியேடிவ் (Mohammed bin Rashid Al Maktoum Global Initiatives – MBRGI) இந்த பிரச்சாரத்தை மேற்பார்வையிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது பற்றி ஷேக் முகமது அவர்கள் கூறுகையில், “இந்த ’10 மில்லியன் உணவு’ பிரச்சாரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய நெருக்கடியிலிருந்து மீண்டு எழுவது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொதுமக்கள், தனியார் மற்றும் மனிதாபிமான சேவைகளை செய்யக்கூடிய துறைகள் அனைத்தும் இந்த நெருக்கடியிலிருந்தும் நமது மக்களை மீட்க இன்று ஒன்றுபட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும் “ஷேகா ஹிந்த் அவர்களின் இரக்கமும், மனிதாபிமான முயற்சிகளும் அவரை நம் சமூகத்தில் பரவலாகப் போற்றப்பட்ட மற்றும் நேசிக்கக்கூடிய நபராக ஆக்குகின்றன. இந்த சவாலான காலங்களில் மனிதாபிமான பிரச்சாரத்தை வழிநடத்துவதில் அவர் சிறந்தவராக இருப்பார்” என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

“இல்லாதவர்களுக்கு கொடுப்பது மற்றும் அமைதியை போற்றும் எங்கள் தேசத்தில், இந்த புனித ரமலான் மாதம் முழுவதும் பசித்தவர்களுக்கு உணவளிப்பதற்கான உன்னதமான இந்த காரியத்தை ஷேகா ஹிந்த் வழிநடத்துவார்” என்றார்.

“இது போன்ற நெருக்கடிகளே பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் உண்மையான மதிப்புகளை வெளிப்படுத்துகின்றன. தற்போதைய நெருக்கடி நம் நாட்டின் நம்பகத்தன்மையையும், கொடுக்கும் மனப்பாங்கு கொண்டவர்களின் மனநிலையையும் வெளிப்படுத்தியுள்ளது” என்றும் ஷேக் முகமது அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி ஷேகா ஹிந்த் கூறியபோது, “இந்த பிரச்சாரத்தைத் தொடங்க ஷேக் முகமது பின் ரஷீத்தின் உத்தரவு அவரது நீண்ட மற்றும் தொடர்ச்சியான உத்வேகம் தரும் மனிதாபிமான பயணத்தின் ஒரு பகுதியை பிரதிபலிக்கிறது” என்றார். அவர் மேலும் கூறுகையில், “உன்னதமான காரணத்திற்காக வழங்கப்படும் ’10 மில்லியன் உணவு’ பிரச்சாரம், நமது சமூகத்தின் நம்பகத்தன்மையையும், மனித நேயத்தையும், குறிப்பாக நெருக்கடி காலங்களில் செயலாற்றும் விதத்தையும் வெளிக்காட்டுகிறது”என்றார்.

நன்கொடை வழங்குவது எப்படி???

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு முறைகளின் மூலம் ’10 மில்லியன் உணவு’ பிரச்சாரத்தில் பங்களிக்க ஆர்வமுள்ள எந்தவொரு தனிநபரும் அல்லது நிறுவனமும் நன்கொடைகள் வழங்க முடியும்.

(1) ஆன்லைன் மூலமான நன்கொடைகளுக்கு:

www.10millionmeals.ae என்ற வலைத்தளத்தின் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உணவுகளை வாங்குவதற்கான பங்களிப்பை செலுத்தலாம்.

(2) எஸ்எம்எஸ் மூலமான நன்கொடைகளுக்கு:

> Send the word “Meal” by SMS to: 1034 to donate one meal with a cost of Dh8. (ஒரு நபருக்கு)
> Send the word “Meal” by SMS to: 1035 to donate five meals with a cost of Dh40. (5 நபருக்கு)
> Send the word “Meal” by SMS to: 1036 to donate 10 meals with a cost of Dh80. (10 நபருக்கு)
> Send the word “Meal” by SMS to: 1037 to donate 20 meals with a cost of Dh160. (20 நபருக்கு)
> Send the word “Meal” by SMS to: 1038 to donate 50 meals with a cost of Dh500. (50 நபருக்கு)

(3) வங்கி பரிமாற்றம் மூலமான நன்கொடைகளுக்கு:

துபாய் இஸ்லாமிக் வங்கியின் ’10 மில்லியன் உணவு’ பிரச்சார வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துவதன் மூலம் பங்களிப்பை செலுத்தலாம். IBAN எண்: AE430240001580857000001

(4) நன்கொடைகளை பொருட்களாக வழங்க விரும்புபவர்கள்:

உணவுப் பொருட்கள் மற்றும் பார்சல்கள் அல்லது வேறு ஏதேனும் சேவைகளை நன்கொடையாக அளிக்க விரும்புவார்கள் 8004006 என்ற என்னை தொடர்பு கொண்டு தங்களின் பங்களிப்பை செலுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!