அமீரக செய்திகள்

ரெசிடென்ஸ் விசா வேலிடிட்டி முடிந்தவர்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரையிலும் அபராதம் இல்லை..!!! UAE அமைச்சரவை அதிரடி அறிவிப்பு..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் காலாவதியான ரெசிடென்ஸ் விசாக்களை வைத்திருப்பவர்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரை அபராதத்திலிருந்து விலக்கு அளிப்பதாக ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 5, 2020) ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று நடைபெற்ற தொலைதூர அமைச்சரவைக் கூட்டத்தில் (Remote Cabinet Meeting), இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் மேலும் இதனுடன் பல திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக உள்நாட்டு தொழிற்சாலைகள் நாட்டின் சுகாதாரத் துறைக்கு துணை நிற்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் மற்றும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum) தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தேவையான பொருட்களின் கையிருப்பை வலுப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சரவையின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் அளித்த செய்தியில், ஐக்கிய அரபு அமீரகம் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடற்கு எதிராக ஒரு அணியாக நின்று செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், “ஐக்கிய அரபு அமீரகம் இன்று ஒரு அணியாக நின்று ஒரு குடும்பம் போல் செயல்படுகிறது. உலகம் எதிர்கொள்ளக்கூடிய இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தனி நபரும் ஒருவருக்கொருவர் உதவி புரிந்தும் துணை நின்றும் வருகின்றனர். இந்த சிறந்த பண்புக்காகவும், பாதுகாப்பான நாட்டிற்காகவும், சிறந்த மற்றும் ஒற்றுமையுள்ளம் கொண்ட மனிதர்களுக்காகவும் கடவுளுக்கு நன்றி தெரிவிப்போம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வெளியிட்ட செய்தியில் “இன்றைய சந்திப்பின் போது, ​​அரசாங்கத்தின் பணிகளைத் தொடர புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதித்தோம். அவர்களின் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக மனநலம் தொடர்பான கூட்டாட்சி வரைவுச் சட்டத்தையும், சுகாதார சேவைகளை வழங்கக்கூடிய தனியார் துறை சார்ந்த நிர்வாக விதிமுறைகளையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். சுகாதாரத் துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான பிற விதிமுறைகளையும் நாங்கள் அங்கீகரித்துள்ளோம்” என்று மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!