அமீரகத்தில் கொரோனாவிற்கான ராபிட் வைரல் கிட் பரிசோதனைக்கு தடை..!! துபாய் சுகாதார ஆணையம் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவறான பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் கொரோனா பரிசோதனை முடிவுகள் பற்றிய அறிக்கைகளை தொடர்ந்து, கொரோனாவை உறுதிப்படுத்த செய்யப்படும் பரிசோதனையான COVID-19 ராபிட் வைரல் கிட் பரிசோதனையை (rapid viral test for COVID-19) துபாய் சுகாதார ஆணையம் (DHA) தடை செய்துள்ளது.
இதனை தொடர்ந்து அமீரகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், வெளிநோயாளர் பராமரிப்பு வசதிகள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், கொரோனாவிற்கான ராபிட் கிட் சோதனை கருவிகளைப் பயன்படுத்துவதையோ அல்லது விற்பதையோ தவிர்க்குமாறு DHA கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த பரிசோதனை கருவிகள் தனிநபரின் இரத்த மாதிரிகளை எடுத்து அதனை பயன்படுத்தி கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடிகள் (antibodies) உடலில் இருப்பதை கண்டறிகின்றன. இருப்பினும், உலகளவில் இந்த பரிசோதனையின் துல்லிய முடிவு 30 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இந்த பரிசோதனைக்கான தடையை உறுதிசெய்து, துபாயின் உயிர் சுகாதார நோயறிதல் மையத்தின் சிறப்பு மருத்துவ நோயியல் நிபுணர் டாக்டர் ஜோதி சதீஷ் ராம்பள்ளிவர் கூறியுதாவது, “இந்த பரிசோதனையின் செயல்திறன் நம்பகமானதல்ல. சோதனை கருவிகள் 97-99 சதவீத உணர்திறனைக் கொண்டிருந்தாலும், சோதனை நம்பகமானதாகவோ அல்லது துல்லியமானதாகவோ இல்லை” என்று கூறியுள்ளார்.
வைரஸ் தடுப்பு கருவிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விளக்கி, ப்ரைம் மருத்துவமனையின் நோயறிதல் பிரிவின் இயக்குனர் டாக்டர் அந்தோணி தாமஸ் கூறுகையில், “பொதுவாக, நம் உடல் ஒரு வைரஸ் அல்லது பாக்டீரியாவை வெளிப்படுத்தும்போது அதற்கு எதிர்வினைகளை உருவாக்குகிறது. வழக்கமாக, ஸ்வாப் பரிசோதனையின் (Nasal Swab) மூலம் எடுக்கப்படும் கொரோனாவிற்கான பரிசோதனை பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் டெஸ்ட் (PCR Test) 5 முதல் 10 நாட்களுக்குள் உடலில் இருக்கக்கூடிய ஆன்டிபாடிகளைக் கண்டறிய முடியும். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் நம்பகமான சோதனை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “தடைசெய்யப்பட்ட கொரோனாவிற்கான ராபிட் கிட் இரத்த பரிசோதனை நம்பமுடியாதது என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில் இது பல தவறான பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் முடிவுகளை தந்து குழப்பங்களையும் ஏற்படுத்தும். இந்த கொரோனா வைரஸ்சிற்கான எங்கள் முக்கிய பலம் COVID- ஐ தடுப்பதற்கும் பரவுவதற்கும் உதவும் பயனுள்ள நோயறிதலாகும். எனவே இந்த ராபிட் கிட் சோதனையை கைவிடுவதே சரியான முடிவாகும் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
source : Gulf News