இந்தியாவில் ஊரடங்கு மேலும் இரு வாரங்கள் நீட்டிப்பு..!! கிரீன் மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கு சற்று தளர்த்தப்படுவதாகவும் அறிவிப்பு.
இந்தியாவில் அமலில் இருக்கும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவானது மே மதம் 4 ஆம் தேதி முடியவிருந்த நிலையில், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ன் படி மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக இந்திய உள்நாட்டு விவகார அமைச்சகம் (Ministry of Home Affairs) தற்போது அறிவித்துள்ளது.
மேலும் நாட்டில் உள்ள மாவட்டங்களை சிவப்பு (ஹாட்ஸ்பாட்), பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வேறுபட்ட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களையும் இந்திய உள்நாட்டு விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் படி பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களாக அறியப்படும் மாவட்டங்களில் ஊரடங்கு சற்று தளர்த்தப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Ministry of Home Affairs issues order under the Disaster Management Act, 2005 to further extend the Lockdown for a further period of two weeks beyond May 4: MHA pic.twitter.com/Cw4bkdMTFU
— ANI (@ANI) May 1, 2020