அமீரக செய்திகள்

Dubai Duty Free raffle-ல் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!! பரிசுத்தொகை 1 மில்லியன் டாலர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை (6.5.2020) நடைபெற்ற துபாய் டூட்டி ஃபிரீ மில்லினியம் மில்லியனர் (Dubai Duty Free Millennium Millionaire) குலுக்கலில் (draw) அமீரகத்தில் இருக்கும் மூன்று இந்தியர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அபுதாபியை வசிப்பிடமாக கொண்ட 47 வயதான அஜித் நரேந்திரன் இந்த ட்ராவில் ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகையை வென்றுள்ளார். இவர் துபாய் டூட்டி ஃபிரீ சீரிஸ் 329 இல் 2657 என்ற எண்ணை உடைய டிக்கெட்டை அவர் தனது நண்பருடன் இணைந்து ஆன்லைனில் வாங்கியுள்ளார்.

வெற்றி பெற்ற நரேந்திரன் அபுதாபியில் உள்ள மேரியட் ஹோட்டலில் (Marriot Hotel) மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இவர், தற்பொழுது 3 ஆண்டுகளாக அபுதாபியில் வசித்து வருகிறார். சமீபத்தில் 2020 ஜனவரியில் இருந்து துபாய் டூட்டி ஃப்ரீ  டிக்கெட்களை ஆன்லைனில் வாங்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் இவர் இந்த மாதம் 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

தனது வெற்றியைப் பற்றி நரேந்திரன் கூறுகையில், “இந்த செய்தியை என்னால் உண்மையில் நம்ப முடியவில்லை. தற்போதைய சூழ்நிலையில், நான் டிக்கெட் வாங்கியதை முற்றிலும் மறந்துவிட்டேன். துபாய் டூட்டி ஃப்ரீ குலுக்கலில் 1 மில்லியன் டாலர் பரிசை வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதை எனது நண்பருடன் பகிர்ந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன். துபாய் டூட்டி பிரீக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று கூறியிருக்கிறார்.

இந்த மில்லினியம் மில்லியனர் டிராவைத் தொடர்ந்து, துபாய் டூட்டி ஃப்ரீ ஆடம்பர மோட்டார் சைக்கிளை வென்றதாக இரண்டு வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. அவர்கள் இருவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

துபாயில் இருக்கும் பர்துபாயில் தங்கியுள்ள 35 வயதான அப்துல் ஜலீல் டி,  Moto Guzzi V85 TT Evocative (Rosso Kalahari) என்ற ஆடம்பர மோட்டார்பைக்கையும் , துபாயை தளமாகக் கொண்ட 45 வயதான இந்திய நாட்டைச் சேர்ந்த ராஜேஷ் பாலன் பாடிக்கல் என்பவர்,  Moto Guzzi Audace (Nevo Travolgente) என்ற மோடோர்பைக்கையும் வென்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!