குவைத் நாட்டில் மே 10 ஆம் தேதி முதல் ‘முழு ஊரடங்கு’ அமல்..!! குவைத் அரசாங்கம் அறிவிப்பு..!!
குவைத் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமை, மே 10 ஆம் தேதி மாலை 4 மணி முதல், மே மாதம் 30 ஆம் தேதி வரையிலும் நாடு தழுவிய முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக குவைத் செய்தி நிறுவனம் (KUNA) இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் மிஸ்ரெம் இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்..
குவைத் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதன் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று வெள்ளிக்கிழமை மட்டும் 641 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே குவைத்தில் ஒரே நாளில் பதிவான கொரோனா வைரஸ் வழக்குகளில் அதிகபட்சமாகும். இதுவரையிலும் மொத்தமாக 7,208 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொற்று நோய்க்கு இதுவரை 47 பேர் உயிரிழப்புகளை சந்தித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் குவைத் நாட்டில் அமலில் இருக்கும் மசூதிகளில் மேற்கொள்ளப்படும் வணக்க வழிபாடுகளுக்கான தடை, விமான போக்குவரத்து நிறுத்தம், மற்றும் அரசு அமைச்சகங்கள் உட்பட பொதுத்துறை சார்ந்த பணிகள் தற்காலிக நிறுத்தம் என அனைத்தும் மே மாதம் 31 வரை நீடிக்கப்படுவதாகவும் மேலும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் மாதம் வரையிலும் மூடப்படுவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Kuwaiti Government decides full curfew https://t.co/oDLpga8ZrW#KUNA #KUWAIT pic.twitter.com/wn6PCI16CA
— Kuwait News Agency – English Feed (@kuna_en) May 8, 2020