UAE : “Overstay” அபராதம் தள்ளுபடி செய்யப்படுபவர்களுக்கு மீண்டும் அமீரகம் நுழைய தடை எதுவும் இல்லை..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய வெளிநாட்டவர்களில், மார்ச் 1, 2020 க்கு முன்னர் காலாவதியான நுழைவு (entry) அல்லது குடியிருப்பு விசா (residency permit) உள்ளவர்கள் எந்த வித அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் (Federal Authority for Identity and Citizenship) செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் காமிஸ் அல் காபி, ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் இந்த புதிய உத்தரவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு இந்த செய்தியை அல் காபி கூறியிருந்தார். இந்த சலுகை காலம் மே மாதம் 18 ம் தேதியிலிருந்து மேலும் மூன்று மாத காலத்திற்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விசா அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டு, மே 18 க்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறும் நபர்கள் அமீரகத்திற்கு மீண்டும் நுழைவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று பிரிகேடியர் காமிஸ் அல் காபி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவில் காலாவதியான எமிரேட்ஸ் ஐடி மற்றும் பணி அனுமதி (work permit) ஆகியவற்றிற்கான அபராதமும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
“சட்டத்தின் விதிமுறைகளின்படி நாட்டிற்குள் மீண்டும் நுழைவதற்கான நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்யும் போது பயனாளி அமீரகத்திற்கு மீண்டும் நுழைவதில் தடை எதுவும் இல்லை, ” என்று பிரிகேடியர் அல் காபி கூறினார்.
இதற்கான முறையான வழிமுறைகள் மற்றும் இந்த சேவைகளை வழங்கும் தளங்களை அதிகாரசபை விரைவில் அறிவிக்கும் என்று அல் காபி கூறியுள்ளார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஅத்துடன், தங்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் ஸ்மார்ட் தளத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் செய்தியாளர் சந்திப்பில் அல் காபி வலியுறுத்தியுள்ளார்.இதற்கிடையில், GDRFA துபாயின் டைரக்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி இந்த புதிய உத்தரவைப் பாராட்டியுள்ளார். இது அமீரக விசா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அவர்களின் விசா நிலையை (visa status) மாற்ற உதவும் என்று கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலைக்கும் , உலகம் தற்போது கண்டிருக்கும் கடினமான சவால்களுக்கும் நடுவில் நமது அமீரக தலைவரின் இந்த உத்தரவு சிறந்த ஒரு செயலாகும். இந்த உத்தரவுகள் விசா விதிமுறைகளை மீறுபவர்களின் விசா நிலையை மாற்றவும், நாடு வழங்கும் சேவைகளிலிருந்து பயனடையவும் உதவும்” என்றும் மேஜர் ஜெனரல் அல் மர்ரி தெரிவித்துள்ளார்.