அமீரக செய்திகள்

அமீரகத்தில் மட்டும் இந்தியா செல்ல விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 1,50,000ஐ கடந்தது..!!! இந்திய துணைத்தூதரகம் தகவல்..!!!

கொரோனாவின் பாதிப்பால் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் தங்கள் விபரங்களை பதிவிடுமாறு அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டிருந்தது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களில் தாயகம் திரும்ப விரும்பும் குடிமக்களின் தரவுகளை சேகரிக்கும் ஆன்லைன் போர்ட்டலில் இதுவரை 150,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பதிவு செய்துள்ளதாக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி, ஆன்லைன் போர்ட்டல் ஆரம்பிக்கப்பட்ட கடந்த புதன்கிழமையிலிருந்து சுமார் 157,000 இந்தியர்கள் அந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களில் சுமார் 40 சதவீதம் பேர் தொழிலாளர்கள் (blue- collared workers) மற்றும் 20 சதவீதம் பேர் தொழில் வல்லுநர்கள் (working professionals) என்று தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “சுமார் 20 சதவீதம் பேர் வேலை இழப்பை சந்தித்துள்ளனர் என்றும் மொத்த விண்ணப்பதாரர்களில் 55 சதவீதம் பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்” என்றும் இந்திய துணைத்தூதரகத்தின் அதிகாரி நீரஜ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

“இருப்பினும், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களிடமிருந்து பதிவுகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்பதால் இந்த புள்ளிவிவரங்கள் மாறும் என்று நாங்கள் கணித்துள்ளோம்” என்றும் அவர் மேலும் கூறினார். விண்ணப்பதாரர்களில் சுமார் 10 சதவீதம் பேர் விசிட் மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் ஆவர். அவர்கள் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதை தொடர்ந்து இந்தியாவிற்கு செல்ல முடியாமல் இங்கு சிக்கித் தவிக்கின்றனர். மேலும், குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் கர்ப்பிணிப் பெண்கள், மற்ற மருத்துவ நிலைமைகள் உள்ளிட்ட காரணங்களினாலும் விண்ணப்பங்கள் வந்துள்ளன” என்றும் அகர்வால் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கேரள அரசாங்கத்தின் அமைப்பான நோர்கா-ரூட்ஸ் (Norka-Roots), நாடு திரும்ப விரும்பும் நாடு முழுவதும் உள்ள கேரள மக்களிடமிருந்து மொத்தம் 398,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. “இதில், அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள். குறைந்தது 175,423 விண்ணப்பதாரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விண்ணப்பித்துள்ளனர்” என்று நோர்கா (Norka) சனிக்கிழமை அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கு வர்த்தக விமானங்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் இராணுவத்தைப் பயன்படுத்தி ஒரு மெகா திட்டத்தில் இந்திய அரசு தற்போது செயல்பட்டு வருவதாக இந்தியாவில் செயல்படும் ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

source : khaleej times

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!