சவூதியில் இருந்து தமிழகத்திற்கு இரு விமானங்கள்.!! வந்தே பாரத் திட்டத்தின் அடுத்த கட்ட விமானப்பட்டியல் வெளியீடு..!!

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கான விமான சேவைகளுக்கான விபரங்களை சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்தில் ஜூன் 16 ம் தேதி முதல் இயக்கப்படவுள்ள 12 விமானங்களில் இரு விமானங்கள் தமிழகத்திற்கு செல்லவிருக்கின்றன.
தற்பொழுது இத்திட்டத்தின் கீழ் இண்டிகோ விமான நிறுவனமும் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கான விமான சேவைகளை தொடங்கியுள்ளது. தமிழகத்திற்கு செல்லும் இரு விமானங்களும் இண்டிகோ (Indigo) நிறுவனத்தை சேர்ந்த விமானங்கள் ஆகும்.
தமிழகத்திற்கு செல்லும் விமானங்கள்
1 . சவுதியில் இருக்கும் தம்மாம் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்தில் உள்ள திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஜூன் 21 ம் தேதி ஒரு விமானம் இயக்கப்பட உள்ளது.
2 . அதே போல் , சவுதியின் மற்றொரு நகரமான ஜித்தாவில் இருக்கும் விமான நிலையத்திலிருந்து தமிழகத்தில் உள்ள கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஜூன் 22 ம் தேதி ஒரு விமானம் செல்லவிருக்கின்றது.
Phase 3 of #VandeBharatMission pic.twitter.com/MN8XtSSWX6
— India in SaudiArabia (@IndianEmbRiyadh) June 9, 2020