UAE : அபுதாபிக்கும் பிற நகரங்களுக்கும் இடையேயான இயக்கத் தடை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட இயக்க தடையானது மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு இன்று முடியவிருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட இருப்பதாக அபுதாபி ஊடக அலுவலகம் (Abudhabi Media Office) ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூன் 2 செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த இந்த இயக்க தடையானது கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியாக அபுதாபியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரிய அளவிலான தேசிய பரிசோதனை திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக அபுதாபியின் அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, அபுதாபி காவல்துறை மற்றும் அபுதாபி சுகாதார துறை ஒன்றிணைந்து இந்த முடிவை அறிவித்திருந்தது. கடந்த இரண்டு வாரங்களில், அபுதாபியில் வசிக்கும் 388,000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ்சிற்கான சோதனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த இயக்க தடையின் மூலம் அபுதாபிக்கும், அபுதாபியின் எல்லைக்கு உட்பட்ட பிற நகரங்களான அல் அய்ன், அல் தஃப்ரா உட்பட அமீரகத்தின் மற்ற நகரங்களான துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் இடையேயான போக்குவரத்து மீதான தடை மேலும் ஒரு வாரம் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமக்கள் உட்பட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இந்த தடை பொருந்தும் என்றும் மேலும் முக்கிய துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் சிறப்பு அனுமதி பெற்றவர்களுக்கு இந்த இயக்கத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அபுதாபி காவல்துறை சார்பாக ஏற்கனவே தெறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Abu Dhabi Emergency, Crisis and Disaster Committee for the Covid-19
Pandemic, in collaboration with @ADPoliceHQ and @DoHSocial, have announced that the Abu Dhabi movement ban is to be extended by one week, starting tomorrow, Tuesday 16 June. pic.twitter.com/IvPC4fiuyI— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) June 15, 2020