அபுதாபியிலிருந்து பிற நகரங்களுக்கு செல்ல இயக்க அனுமதி தேவையில்லை..!! தொழிலாளர்கள் இயக்கம் மீதான தடை தொடரும் என அறிவிப்பு..!!
அபுதாபியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப் பெரிய அளவிலான கொரோனா பரிசோதனையை முன்னிட்டு, அபுதாபிக்கும் அமீரகத்தின் மற்ற நகரங்களான அல் அய்ன், அல் தஃப்ரா, துபாய், ஷார்ஜாஹ், அஜ்மன் உட்பட அனைத்து பிற பகுதிகளுக்கும் இடையேயான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அபுதாபியிலிருந்து வெளியே செல்லவோ அல்லது அமீரகத்தின் மற்ற பகுதியிலிருந்து அபுதாபிக்குள் நுழையவோ அபுதாபி காவல்துறையிடம் இயக்க அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அபுதாபியில் இருக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அபுதாபியை விட்டு வெளியே செல்ல இயக்க அனுமதி பெற தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், மற்ற பகுதிகளிலிருந்து அபுதாபிக்குள் நுழைய இயக்க அனுமதி பெற வேண்டும் என்றும் அமீரகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து அபுதாபிக்குள் நுழைய அபுதாபி காவல்துறையினரால் வழங்கப்பட்ட இயக்க அனுமதி கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்க அனுமதி பெறுவது அல் அய்ன், அல் தஃப்ரா, அபுதாபி போன்ற நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் இடையேயான இயக்கம் தேசிய சுத்திகரிப்பு திட்ட நேரங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeமேலும், தொழிலாளர்களுக்கு அபுதாபிக்கும் அமீரகத்தின் மற்ற நகரங்களான அல் அய்ன், அல் தஃப்ரா, துபாய், ஷார்ஜாஹ், அஜ்மன் உட்பட அனைத்து பிற பகுதிகளுக்கும் இடையேயான போக்குவரத்து தடை நீடிக்கும் என்றும் அவர்கள் அபுதாபிக்குள் நுழையவோ அபுதாபியில் இருந்து வெளியேறவோ தடை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Abu Dhabi Emergency, Crisis and Disaster Committee for the Covid-19 Pandemic, in collaboration with @ADPoliceHQ and @DoHSocial, have announced that citizens and residents may leave Abu Dhabi emirate without a permit. pic.twitter.com/YSVfIbQEDP
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) June 16, 2020