அமீரகம் திரும்ப துபாய் குடியிருப்பாளர்களுக்கென GDRFA-வின் பிரத்தியேக இணையதளம் மற்றும் படிவம்..!!
வெளிநாடுகளில் இருக்கும் அமீரக குடியிருப்பாளர்களில் செல்லுபடியாகும் விசா வைத்திருப்பவர்கள் ICA ஒப்புதல் பெற்று ஜூன் 1 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் இருந்தும் குடியிருப்பாளர்கள் பலரும் அமீரகத்திற்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில், துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, துபாய் ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் துபாய் குடியிருப்பாளர்கள் ஜூன் 22 ம் தேதி முதல் துபாய்க்கு திரும்பி வரலாம் என அறிவித்து அதற்கான புதிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இதன்படி, துபாய் குடியிருப்பாளர்கள் எளிதில் மீண்டும் துபாய்க்கு வருவதற்கு துபாய் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் smart.gdrfad.gov.ae (லிங்க் இணைக்கப்பட்டுள்ளது) என்ற இணையதளத்தில் அனுமதி பெற வேண்டும் என்றும் அதில் ஒப்புதல் பெற்ற பின்னரே துபாய்க்கு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இது பற்றி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தெரிவிக்கையில், குடியிருப்பாளர்களின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டால் அவர்கள் உடனடி பதிலை பெறுவார்கள் என்றும், ஒப்புதல் பெறாதவர்கள் மீண்டும் முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், குடியிருப்பாளர்கள் ஒப்புதல் பெற்ற பின்னரே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, GDRFA விண்ணப்ப எண்ணை பதிவிடுமாறு கேட்கப்படும் என்றும் பயணம் செய்யும் போது ஒப்புதல் பெற்ற மின்னஞ்சலின் நகலை உடன் வைத்து கொள்ள வேண்டும் என்றும் எமிரேட்ஸ் நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeதுபாய்க்கு வரும் ஒவ்வொரு பயணிகளும் சுகாதார அறிவிப்பு படிவம் (health declaration form) மற்றும் தனிமைப்படுத்தலுக்கான அறிவிப்பு படிவம் (quarantine declaration form) ஆகிய இரண்டையும் பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து, துபாய் விமான நிலையம் வந்தடைந்தவுடன் சுகாதார ஆணைய ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (இரண்டு படிவங்களின் லிங்கும் மேலே இணைக்கப்பட்டுள்ளது)
துபாய் திரும்பும் குடியிருப்பாளர்களுக்கான நடைமுறைகள்:
> துபாய் விமான நிலையங்களில் இயங்கும் விமானங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலம் பயணிகள் தங்கள் விமானங்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
> கோவிட் -19 சம்பந்தமான பரிசோதனை மற்றும் சிகிச்சையின் செலவுகளைச் செலுத்துவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டைக் கூறும் அறிவிப்பில் அவர்கள் கையெழுத்திட வேண்டும்.
> அனைத்து வருகையாளர்களும் தங்கள் விவரங்களை கோவிட் -19 DXB அப்ளிகேஷனில் பதிவு செய்ய வேண்டும்.
> பயணிகள் புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR கொரோனா நெகடிவ் சோதனை முடிவு வைத்திருக்க வேண்டும்.
> முக கவசம் அணிவது, இரண்டு மீட்டர் சமூக தூரத்தை பராமரித்தல், தவறாமல் கைகளை கழுவுதல் போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் அவர்கள் பின்பற்ற வேண்டும்.