அமீரக செய்திகள்

வெளிநாட்டில் இருக்கும் குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்ப விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள்….

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட போக்குவரத்து தடையின் காரணமாக அமீரக ரெசிடென்ஸ் விசாக்களை வைத்திருந்து அமீரகத்திற்கு வர முடியாமல் வெளிநாடுகளில் அல்லது தங்கள் தாய்நாடுகளில் சிக்கியிருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் மீண்டும் அமீரகத்திற்கு திரும்பலாம் என ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

இவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் குடியிருப்பாளர்கள் அமீரகத்திற்கு வர அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் (ICA) இணையதளத்தின் மூலம் தங்கள் ரெசிடென்ஸ் நுழைவு அனுமதி (Entry Permission) வேண்டி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்வதற்கான வழிமுறைகள்:

குறிப்பு : அமீரகம் திரும்ப விண்ணப்பிப்பவர்கள் அமீரக அரசிடம் ஒப்புதல் பெறப்படுவதற்கு முன்னர் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டாம்.

 1. தேவையான ஆவணங்கள்:
  – வண்ண புகைப்படம்
  – ரெசிடென்ஸ் விசா நகல்
  – பாஸ்போர்ட் நகல்
  – அமீரகத்தை விட்டு வெளிநாடு சென்றதற்கான காரணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

(வெளிநாடு சென்றவர் அலுவலகத்தில் பணிபுரிபவராக இருந்தால் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் மூலமும் மாணவராக இருப்பின் அவர் பயிலும் கல்வி நிறுவனத்தின் மூலமாகவும் கடிதம் பெறப்பட்டு சமர்ப்பிக்க வேண்டும். எவரேனும் சுற்றுலா சென்றிருப்பின் அதற்கு ஆதாரமாக விமான பயண டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டும்)

2. smartservices.ica.gov.ae என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

3. ஸ்மார்ட் சேவைகளின் பட்டியலில் இருக்கும்  ‘Registration for residents outside UAE’ என்பதைக் கிளிக் செய்யவும்.

4. அதன் பின்னர் ‘Start service’ என்பதைக் கிளிக் செய்யவும்.

5. அதனை தொடர்ந்து வரும் மின் படிவத்தில் விபரங்களை நிரப்பி, தகுந்த ஆவணங்களை இணைக்கவும். இறுதியாக விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து சமர்ப்பிக்கவும்.

அமீரகம் திரும்ப நேரடியாக விண்ணப்பிக்க வேண்டிய பிரத்யேக லிங்க்

 • ‘OTHER SERVICES – RESIDENTS OUTSIDE UAE – ENTRY PERMISSION – ISSUE’ எனும் இந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றவுடன் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் உண்டான பதில்களை பூர்த்தி செய்து, இறுதியாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

 • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
 • விண்ணப்பத்தை வெற்றிகரமாக சமர்பித்ததன் பின்னர், விண்ணப்பதாரர்களின் ஈமெயில் முகவரிக்கு Tracking Number அனுப்பப்படும்.
 • அதன் பின்னர், விண்ணப்பம் ஒப்புதல் பெறும் வரை பொறுத்திருக்க வேண்டும்
 • விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் +971600522222 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம்.
 • ICA விடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!