அமீரக செய்திகள்

UAE: விமான டிக்கெட்டிற்காக தூதரகம் வரும் தொழிலாளர்களுக்கு இந்திய துணை தூதரின் வேண்டுகோள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களில் தாயகம் செல்ல விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்களை, இந்தியாவிற்கு சிறப்பு விமானம் மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கான விமான பயண டிக்கெட்டுகளுக்காக, தொழிலாளர்கள் பெருந்திரளாக இந்திய தூதரகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு இந்திய துணைத் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து கடந்த திங்கள்கிழமை இந்திய துணை தூதரகம் சார்பாக வெளியிடப்பட்ட ஒரு வீடியோ செய்தியில், இந்திய சமூகத்திடம், குறிப்பாக தொழிலாளர்கள் விமான டிக்கெட் வேண்டி தோதாரத்திற்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும் தொடர்ந்து தொழிலாளர்கள் தூதரகத்திற்கு வந்து கொண்டிருப்பதால் இந்திய துணை தூதரக அதிகாரி விபுல் இது குறித்து நேற்று மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இந்திய தூதரகம் சார்பாக விமான பயண டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் ஏராளமானோர் தூதரகத்திற்கு வருவதை நான் காண்கிறேன். இது உண்மை இல்லை” என்றும் அவர் அந்த வீடியோ செய்தியில் விளக்கியுள்ளார்.

இந்திய தூதரகம், விண்ணப்பித்தவர்களின் படிவங்களை ஏற்றுக்கொள்கிறது, ஆனால் இந்த பணி இந்திய சமூகத்தின் பல உறுப்பினர்களை கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இதனால் வலைத்தளத்தின் மூலம் தாயகம் திரும்பி செல்ல பதிவு செய்தவர்களிடமிருந்து அவசர தேவையுடையவர்களை அழைத்துச் செல்வதில் முழு நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுகிறது.

நாங்கள் இந்த பணியை தொடருவோம், எங்களால் முடிந்ததைச் செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம். இந்திய சமூகத்தினர் தொலைபேசி அல்லது மின்னஞ்சல்கள் மூலமாக மட்டுமே தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கு வரும் அனைவரின் வேதனையையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம், அவர்கள் இந்தியாவுக்கு திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பிற்காக இன்னும் காத்திருக்கின்றனர். தயவுசெய்து பொறுமையாக இருங்கள். மேலும் விமானங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மக்களும் இந்தியாவிற்கு திரும்ப முடியும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றான சமூக இடைவெளியை பின்பற்றாமல் அனைவரும் கூடி நிற்பது சட்டத்திற்கு புறம்பானது ன்றும், மேலும் கடும் வெப்பத்தில் மக்கள் வெளியே நிற்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய தூதரகங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளுமாறும் இந்திய துணை தூதர் விபுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டோல் ஃப்ரீ நம்பர் : 800 46342,

24 மணி நேர அவசர அழைப்புகளுக்கு தொடர்பு கொள்ள : 0543090575, 0565463903

மின்னஞ்சல் முகவரி : [email protected],

ட்விட்டர் முகவரி : @cgidubai

ஃபேஸ்புக் : India in Dubai

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!