UAE : ஜூலை 2 வரையிலான மூன்றாம் கட்டத்தில் 56 விமானங்கள்..!! தமிழகத்திற்கு பூஜ்ஜியம்..!! மன உளைச்சலில் தமிழர்கள்..!!
வந்தே பாரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் நிறைவடைய இருப்பதை முன்னிட்டு, தற்பொழுது மூன்றாம் கட்டமாக வெளிநாட்டிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து செல்வதற்கான விமானப் பட்டியலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மூன்றாம் கட்ட நடவடிக்கை ஜூன் மாதம் 16 ம் தேதியிலிருந்து தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 2 ஆம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மட்டும் இந்தியாவிற்கு இயக்கப்படவுள்ள 56 விமானங்களில் தமிழகத்திற்கு எந்த ஒரு விமானமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் கட்டமாக அமீரகத்திலிருந்து இயக்கப்படும் 56 விமானங்களும் இந்தியாவின் மற்ற மாநிலங்களான கேரளா, குஜராத், ஒடிஷா, பீஹார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம் மற்றும் டெல்லி போன்ற பகுதிகளுக்கே இயக்கப்பட இருக்கிறது. அதிலும் குறிப்பாக 44 விமானங்கள் கேரள மாநிலத்திற்கு மட்டுமே செல்ல இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இந்தியாவிற்கு அழைத்து செல்லப்பட்ட இரு கட்டங்களிலும், கேரளாவிற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டிருந்தது.
அமீரகத்திற்கான இந்திய துணை தூதர் விபுல் அவர்கள், மூன்றாவது கட்ட நடவடிக்கையில் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படும் எனவும், இந்த திட்டத்தில் தனியார் விமான நிறுவனங்களும் ஈடுபடுத்தப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதனால் தற்போது வரையிலும் இரண்டு, மூன்று என தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், மூன்றாம் கட்டத்தில் கூடுதல் விமான சேவைகள் அறிவிக்கப்படும் என தமிழ் நாட்டை சார்ந்த அனைவரும் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட அறிவிக்கப்படாதது, எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்கும் ஏமாற்றதையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஎனினும், கடந்த இரண்டாம் கட்ட திட்டத்தின் போது வெளியிடப்பட்ட ஆரம்பகால பட்டியலிலும் தமிழகத்திற்கு எந்த ஒரு விமானமும் அறிவிக்கப்படாமல் இருந்தது. பின்னர் Phase 2+ மற்றும் Phase 2++ என்று கூடுதலாக சேர்க்கப்பட்ட விமான சேவைகளின் மூலம் அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Flight details from UAE to India (2) pic.twitter.com/xUx7b94h4c
— Khaleej Tamil (@khaleej_tamil) June 11, 2020