ஓமான் : 16 விமானங்களில் தமிழகத்திற்கு ஒரு விமானம்..!! வந்தே பாரத் 4-ம் கட்டத்தின் விமானப் பட்டியல் வெளியீடு..!!
இந்தியா மேற்கொண்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் ஓமான் நாட்டிலிருந்து இந்தியர்களை அழைத்து செல்லும் விமானங்களின் பட்டியலை ஓமான் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஓமான் நாட்டிலிருந்து இந்த நான்காம் கட்டத்தில் மொத்தம் 16 விமானங்கள் ஓமானில் இருக்கும் இந்தியர்களை அழைத்து கொண்டு தாயகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 16 விமானங்களில் கேரளாவிற்கு 11 விமானங்கள், டெல்லிக்கு ஒரு விமானம், மங்களூர் நகரிற்கு ஒரு விமானம், ஹைதெராபாத்திற்கு ஒரு விமானம், மும்பைக்கு ஒரு விமானம் மற்றும் சென்னைக்கு ஒரு விமானம் என செல்லவிருக்கின்றன.
சென்னைக்கு வரும் ஜூலை மாதம் 2 ம் தேதி ஓமானிலிருக்கும் தமிழர்களை அழைத்து கொண்டு ஒரு விமானம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் அறிவிக்கப்பட்ட நான்கு கூடுதல் விமானங்களில் ஒரு விமானம் வரும் 29 ம் தேதி சென்னைக்கு செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
SubscribePress Release: Flights under Phase 4 of #VandeBharatMission from Oman. pic.twitter.com/d8QKES3wTr
— India in Oman (Embassy of India, Muscat) (@Indemb_Muscat) June 25, 2020