மலேசியா, சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் விமானங்களின் விபரங்கள்..!!

வந்தே பாரத் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான விமானங்களின் பட்டியல் வெளியானதை தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான மலேஷியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் விமானங்களின் விபரங்களை இந்த இரு நாடுகளுக்கான இந்திய தூதரகங்களும் வெளியிட்டுள்ளன. இதன்படி, மலேசியாவில் இருந்து இந்தியா செல்லும் 12 விமானங்களில் 5 விமானங்கள் தமிழகத்திற்கு செல்லவிருக்கின்றன. அதேபோல், சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்லும் 19 விமானங்களில் 15 விமானங்கள் தமிழகத்திற்கு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா
மலேசியாவிலிருந்து இந்தியா செல்லும் விமானங்களில் 5 விமானங்கள் தமிழகத்தில் உள்ள திருச்சி, சென்னை, மதுரை ஆகிய நகரங்களுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து விமானங்களும் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழக நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- ஜூன் 11 – திருச்சி
- ஜூன் 12 – சென்னை
- ஜூன் 13 – மதுரை
- ஜூன் 20 – திருச்சி
- ஜூன் 23 – சென்னை
Indian nationals stranded in Malaysia may note d revised flight schedule(9-23 June) under #VandeBharatMission. It is reiterated that Air India has nominated only Oscar Holidays Sdn Bhd for local ticketing. Pls beware of fraudulent calls and emails. @MEAIndia @MoCA_GoI @PIB_India pic.twitter.com/wW7AjW3lbM
— India in Malaysia (@hcikl) June 5, 2020
சிங்கப்பூர்
சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் விமானங்களில் 15 விமானங்கள் மதுரை, திருச்சி, கோவை மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து தமிழக நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- ஜூன் 9 – மதுரை
- ஜூன் 10 – திருச்சி
- ஜூன் 10 – கோவை
- ஜூன் 11 – மதுரை
- ஜூன் 12 – கோவை
- ஜூன் 13 – திருச்சி
- ஜூன் 13 – மதுரை
- ஜூன் 14 – சென்னை
- ஜூன் 14 – கோவை
- ஜூன் 14 – சென்னை
- ஜூன் 15 – மதுரை
- ஜூன் 20 – திருச்சி
- ஜூன் 20 – சென்னை
- ஜூன் 21 – திருச்சி
- ஜூன் 23 – சென்னை
Schedule of Special Repatriation Flights as of now.
All pax wil have to adhere to quarantine requirements & sign d undertaking.
Please note the NEW ticketing guidelines.
Pl follow updates here & on website for correct info.
More flights to more destinations in coming days. pic.twitter.com/cXOKjpvhsX— India in Singapore (@IndiainSingapor) June 5, 2020