பஹ்ரைன் : நான்காம் கட்டத்தில் தமிழகத்திற்கு 3 விமானங்கள்.!! புதிய பட்டியல் வெளியீடு..!!
வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கான விமானங்களின் பட்டியலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நான்காம் திட்ட அட்டவணையின்படி, பஹ்ரைன் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு மட்டும் 47 விமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் விமானம் வரும் ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் இந்தியாவிற்கு இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் 47 விமானங்களில் 33 விமானங்கள் கேரளா மாநிலத்திற்கும், தமிழகம், உத்திர பிரதேசம் மற்றும் தெலுங்கனாவிற்கு தலா 3 விமானங்களும், ராஜஸ்தானிற்கு 2 விமானங்களும், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிற்கு தலா ஒரு விமானமும் இயக்கப்பட உள்ளது.
நான்காம் திட்டத்தில் பஹ்ரைனிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் மூன்று விமானங்களில் இரண்டு விமானங்கள் சென்னைக்கும் ஒரு விமானம் மதுரைக்கும் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மூன்றாம் கட்டத்தில் அறிவிக்கப்பட்ட கூடுதல் விமானங்களில் பஹ்ரைன் நாட்டிலிருந்து சென்னைக்கு ஒரு விமானம் சனிக்கிழமை (ஜூன் 27,2020) செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.
பஹ்ரைனிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பயண தேதிகளின் விபரம்..
வரிசை எண் | பயண தேதி | புறப்படும் இடம் | செல்லும் இடம் |
1 | ஜூலை 5, 2020 | பஹ்ரைன் | சென்னை |
2 | ஜூலை 6, 2020 | பஹ்ரைன் | மதுரை |
3 | ஜூலை 13, 2020 | பஹ்ரைன் | சென்னை |