அமீரக செய்திகள்

ஜூன் 23 முதல் அமீரகத்திலிருந்து வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் கவனிக்க வேண்டியவை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமலில் இருந்த விமான போக்குவரத்து இயக்கம் மீதான தடைகளை அமீரக அரசு விலக்கிக்கொள்ளப்பட்டு வருவதை தொடர்ந்து வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் அமீரகத்தில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்கள் மற்றும் அமீரக குடிமக்கள் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்திருந்தது.

கடந்த மார்ச் மாதம் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட விமான போக்குவரத்தானது தற்போது மீண்டும் வழக்கமான முறையில் இயங்க இருப்பதை தொடர்ந்து, பயணம் மேற்கொள்பவர்கள் கடைபிடிக்க புதிய அறிவிப்பையும் அமீரக அரசு வெளியிட்டிருந்தது.

அந்த புதிய அறிவிப்பின் படி குறைந்த ஆபத்துள்ள இடம், அதிக ஆபத்துள்ள இடம் மற்றும் இரண்டுக்கும் நடுநிலையிலான ஆபத்துள்ள இடம் என பிற நாடுகள் மூன்று தரங்களாக பிரிக்கப்பட்டு அதனடிப்படையில் அமீரகவாசிகள் வெளிநாடு பயணம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளிநாடு பயணம் மேற்கொள்பவர்கள் என்னென்ன நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்?
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து குடிமக்களும் குடியிருப்பாளர்களும், அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் (FAIC) வலைத்தளம் மூலம் தவாஜுதி சேவையில் (Twajudi Service) பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • பயணத்திற்கு முந்தைய சோதனை, சுகாதார காப்பீடு, மற்றும் தனிமைப்படுத்தல் அல்லது கண்காணிப்பு திட்டங்கள் / பயன்பாடுகள் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது உட்பட, அவர்கள் பயணிக்கும் நாட்டின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
  • பயணம் மேற்கொள்பவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியம் குறித்த தகவலை சுகாதார நிலை படிவத்தில் நிரப்ப வேண்டும்.
  • விமான நிலையத்தில் முக கவசங்கள் மற்றும் கையுறைகள் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பராமரிப்பது போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட வேண்டும்.
  • அனைத்து பயணிகளும் பயணிப்பதற்கு முன்பு கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தேசிய நெருக்கடி மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய உத்தரவுப்படி கொரோனா சோதனையில் எதிர்மறையான முடிவுகளை பெற்ற பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பயணத்திற்குப் பிறகு ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் என்ன செய்வது?
  • வெளிநாடு பயணம் சென்றவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அருகிலுள்ள மருத்துவ மையத்திற்கு சென்று கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • அமீரக நாட்டு குடிமக்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் சென்றுள்ள நாட்டில் இருக்கக்கூடிய ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு அறிவிக்க வேண்டும்.

வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள் அமீரகத்திற்கு திரும்பும்போது அமீரக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தொடர்பான விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. எனினும் இது பயணம் சென்று வரும் நாடுகளை பொறுத்து மாறுபடும் என கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!