அமீரக விசிட் விசா காலாவதியானவர்களுக்கு மேலும் ஒரு மாதம் சலுகை காலம் அளிக்கப்படும்..!! ICA தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு காலாவதியாகி இருக்கும் விசிட் மற்றும் சுற்றுலா விசா வைத்திருக்கும் நபர்களுக்கு ஜூலை 12 ஆம் தேதியிலிருந்து ஒரு மாத காலம் சலுகை கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் ஆகஸ்ட் 11 ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது தங்களின் விசா நிலையை மாற்ற வேண்டும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அவர்கள் நாட்டை விட்டு வெளியேற, அவர்களுக்கு ஆகஸ்ட் 11 ம் தேதியில் இருந்து கூடுதலாக 30 நாள் கால அவகாசம் வழங்கப்படும் என ICA தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “சமீபத்தில் விசா நீட்டிப்பு தொடர்பான அமைச்சரவையின் அறிவிப்பின் படி, அமீரகத்திற்குள் இருக்கும் நுழைவு அனுமதி மற்றும் விசிட் விசா வைத்திருக்கும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது தங்களின் விசா நிலையினை மாற்றிக்கொள்ளவோ ஒரு மாதம் (30 நாட்கள்) சலுகை காலம் கொடுக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது இந்த சலுகை காலம் அதிகாரசபையினால் ஒரு முறை மட்டும் புதுப்பிக்கபடும். அதன் பிறகு, நுழைவு அனுமதி அல்லது விசா வைத்திருப்பவர்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சலுகை கால நீட்டிப்பானது ICA மூலம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூடுதலாக அறிவிக்கப்பட்ட சலுகை காலம் குறித்த செயல்முறைக்கான விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் இது குறித்த கூடுதல் விபரங்களை ICA வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
حَمَلة الأذونات وتأشيرات الدخول المتواجدين داخل الدولة
Holders of Entry Permits and visit visas inside the country
_____#الهيئة_الاتحادية_للهوية_والجنسية #الإمارات #كوفيد19 #ICA #Identityandcitizenship #UAE pic.twitter.com/EKGjrPwJ07— Identity and Citizenship- UAE (@ICAUAE) July 16, 2020