VBM 5: அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு மட்டும் 61 விமானங்கள்..!! பயண தேதிகளின் முழு விபரங்கள் உள்ளே..!!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகம் திருப்பி அனுப்பும் நடவடிக்கையான வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டம் வரும் ஜூலை மாதம் 31 ம் தேதி முடிவடைய இருப்பதை முன்னிட்டு, ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டம் தொடங்க இருப்பதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து, ஐந்தாம் கட்டத்தில் இயக்கப்படவிருக்கும் விமானங்களின் முழுவிபரப் பட்டியலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தியாவிற்கு இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மேலும், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களும் தாங்கள் இயக்கும் விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவை விமான நிறுவனத்தின் வலைத்தளம் வாயிலாகவோ அல்லது பயண முகவர்கள் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
அதனை தொடர்ந்து, பல இந்தியர்களும் இந்தியா செல்ல வேண்டி டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திற்கு மட்டும் 61 விமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட நான்கு கட்டங்களிலும் தமிழகத்திற்கு இது போன்றதொரு அதிகளவு விமானங்கள் ஒதுக்கப்படவில்லை. தற்பொழுது ஐந்தாம் கட்டத்தில் அதிகளவு விமானங்கள் தமிழகத்திற்கு ஒத்துக்க்கப்பட்டிருப்பது அமீரகத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.