அபுதாபியின் எல்லையில் திறக்கப்பட்டிருக்கும் கொரோனா பரிசோதனை மையத்தை அணுக முன்பதிவு அவசியம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து அபுதாபிக்குள் நுழைவதை எளிதாக்கும் விதமாக மூன்று நிமிடங்களுக்குள் கொரோனாவிற்கான முடிவுகளைத் தரும் புதிய பரிசோதனை மையம் துபாய் அபுதாபி எல்லை பகுதியான கன்தூத் (Ghantoot) பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த புதிய மையத்தில் மேற்கொள்ளப்படும் செரோலஜி அல்லது ஆன்டிபாடி சோதனைக்காக 50 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது இந்த சோதனை மேற்கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அபுதாபியின் அவசர, நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மைக்கு குழு புதன்கிழமை அறிவித்துள்ளது.
லேசர் அடிப்படையிலான DPI ஸ்கிரீனிங் செய்ய வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், அபுதாபியின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை குழு, வலைதளத்தின் மூலம் முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இந்த சோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், வழக்கமான PCR சோதனை மூலம் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட்டை வைத்திருக்கும் நபர்களும் அபுதாபிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு பெற இங்கே கிளிக் செய்யவும்