UAE: ஜூலை 31 வரையிலான நான்காம் கட்டத்தில் தமிழகத்திற்கு 5 விமானங்கள் கூடுதலாக சேர்ப்பு..!! புதிய அட்டவணை வெளியிட்ட MEA..!!
வந்தே பாரத்தின் நான்காம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் தற்போது ஜூலை 15 முதல் ஜூலை 31 வரையிலான நாட்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த விமான பட்டியலில் தற்போது மேலும் 120 விமானங்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் குறிப்பாக வளைகுடா நாடுகள், மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுக்கே இயக்கப்படவிருப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அமீரகத்திற்கு ஜூலை 19 முதல் 31 வரையிலான நாட்களுக்கு தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள விமானங்களில் 5 விமானங்கள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஐந்து விமானங்களும் தமிழகத்தின் சென்னை, மதுரை மற்றும் திருச்சி சர்வதேச விமான நிலையங்களுக்கு இயக்கப்படும் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள விமான பயண அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜூலை 15 முதல் 31 வரையிலான நான்காம் கட்ட நடவடிக்கையில் வெளியிட்டிருந்த பட்டியலில் 13 விமானங்கள் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஜூலை 19 முதல் 31 வரை தமிழகத்திற்கு செல்லும் விமானங்களின் விபரங்கள்…
இதற்கு முன்னதாக ஜூலை 31 வரையிலான நாட்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விமானங்களின் விபரங்கள்…
(குறிப்பு: இந்த அட்டவணையில் ஜூலை 22 ஆம் தேதி ஷார்ஜாவிலிருந்து சென்னை செல்லும் விமானத்தின் புறப்படும் நேரம் 14.00 என்பது குறிப்பிடத்தக்கது.)