VBM4 : சவூதியில் இருந்து இந்தியாவிற்கு 47 கூடுதல் விமானங்கள்..!! தமிழகத்திற்கு 4 விமானங்கள் அறிவிப்பு..!! விலைப்பட்டியல் வெளியீடு..!!
வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் சவூதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு கூடுதலாக 47 விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக சவூதி அரேபியாவில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கூடுதலாக அறிவிக்கப்பட்ட 47 விமானங்களில் நான்கு விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அந்த நான்கு விமானங்களும் தமிழ்நாட்டில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கே இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்திய தூதரகத்தில் இந்தியா திரும்ப வேண்டி விண்ணப்பித்தவர்கள் நேரடியாக குறிப்பிட்ட விமான நிறுவன அலுவலகம் சென்று விமான டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு விமானங்களின் டிக்கெட்டிற்கான விலையும் 1,330 சவூதி ரியால் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.
சவூதியிலிருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் விமானங்கள்
Additional flights in Phase 4 of #VandeBharatMission along with fare details pic.twitter.com/1KiIWRtADB
— India in SaudiArabia (@IndianEmbRiyadh) July 20, 2020