சவூதியிலிருந்து இந்தியாவிற்கு 36 கூடுதல் விமானங்கள்..!! தமிழகத்திற்கு 2 விமானங்கள் அறிவிப்பு..!!
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து செல்லும் நடவடிக்கையின் நான்காம் கட்டத்தில் கூடுதலாக 36 விமானங்கள் சவூதியில் இருந்து இந்தியாவிற்கு செல்லவிருப்பதாக சவூதியில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விமானங்களுடன் சேர்த்து தற்பொழுது கூடுதலாக அறிவிக்கப்பட்ட 36 விமானங்களும் இந்தியாவின் திருச்சி, டெல்லி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படவுள்ளன.
கூடுதலாக இயக்கப்படவுள்ள விமானங்களில் இரு விமானங்கள் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரு விமானங்களும் தமிழகத்தில் இருக்கும் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கே இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்டத்தில் இதற்கு முன்னராக அறிவிக்கப்பட்ட விமானங்களில் சவூதியில் இருந்து தமிழகத்திற்கு எந்த ஒரு விமானமும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதியிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் விமானங்கள்