ஷார்ஜா வரும் பயணிகளுக்கான PCR டெஸ்ட் ரிசல்ட்டின் செல்லுபடி காலம் குறைப்பு..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தகவல்..!!
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க இருக்கும் குடியிருப்பாளர்கள் அமீரகத்திற்கு வருகை தரும் விமான நிலையங்களை பொறுத்து கொரோனா பரிசோதனைக்கான செல்லுபடியாகும் காலத்தில் மாற்றங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பதிவின் படி, இந்தியாவில் இருந்து அபுதாபி மற்றும் துபாய் ஆகிய நகரங்களுக்கு வரவிருக்கும் பயணிகள் 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாவிற்கான PCR சோதனை முடிவு வைத்திருக்க வேண்டும் என்றும் ஷார்ஜா விமான நிலையத்திற்கு வரவிருக்கும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாவிற்கான PCR சோதனை முடிவு வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் இந்தியாவில் இருக்கும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து மட்டுமே கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களின் விபரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.