ஓமான் : ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்கள் மேலும் நீட்டிப்பு..!!
ஓமான் நாட்டில் வரவிருக்கும் ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு அந்நாட்டில் பணிபுரியும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை நாட்களை சமீபத்தில் ஓமான் அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்பொழுது ஓமான் நாட்டில் அறிவிக்கப்பட்டிருந்த ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்கள் மேலும் நீட்டிக்கப்படுவதாக ஓமான் நாட்டின் சுல்தான் மாண்புமிகு ஹைதம் பின் தாரிக் அவர்கள் இன்று (திங்கள்கிழமை) அறிவித்துள்ளார். அதன்படி, ஓமான் நாட்டில் இருக்கும் அரசு மற்றும் தனியார் துறைகளுக்கான ஈத் அல் அத்ஹாவிற்கான விடுமுறை நாட்கள் வரும் வியாழக்கிழமை ஜூலை 30 முதல் அடுத்த வியாழக்கிழமை ஆகஸ்ட் 6 வரையிலான 8 நாட்கள் எனவும் அதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அலுவலகங்களில் பணிக்கு திரும்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அந்நாட்டில் ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்கள் ஆகஸ்ட் 3 ம் தேதி வரை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களில் அந்நாட்டில் கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு கடந்த 25 ம் தேதி முதல் நாடு முழுவதும் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.