UAE : அரசு மற்றும் தனியார் துறைகளுக்கான ஈத் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு மனித வளங்களுக்கான கூட்டாட்சி ஆணையம் (Federal Authority for Government Human Resources) அமீரகத்தில் இருக்கும் பொதுத் துறைகளுக்கு இந்த மாத இறுதியில் வரக்கூடிய ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு நான்கு நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் ஜூலை 30 ம் தேதி வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை என நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அமீரக அரசானது, அரசு மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டு துறைகளுக்கும் பொது விடுமுறைகள் ஒரே மாதிரியாக அளிக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தபடியால், அமீரகத்தில் உள்ள தனியார் துறைகளுக்கும் நான்கு நாட்கள் ஈத் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நான்கு நாட்கள் விடுமுறைகுப் பின்னர், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஆகஸ்ட் 3 ம் தேதி முதல் பணிக்கு திரும்புவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
Eid al-Adha holiday for Federal Entities: 4 Days from Thursday, July 30th to Sunday, August 2nd
and to be resumed work on Monday, August 3rd pic.twitter.com/lsnrXdXEIt— FAHR (@FAHR_UAE) July 22, 2020