தமிழகத்திலிருந்து அமீரகத்திற்கு இயக்கப்படவிருக்கும் விமானங்களின் விபரங்கள்..!! டிக்கெட் விற்பனை தொடக்கம்..!!

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்திய குடிமக்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதை போன்று, தற்போது இந்தியாவில் சிக்கித்தவிக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் நாடு திரும்ப இந்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்திருந்தது. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் விமான போக்குவரத்து அமைச்சகங்களுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, அமீரகத்தில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துவர மேற்கொள்ளப்பட்டுவரும் வந்தே பாரத் விமானங்களின் மூலம், ICA மற்றும் GDRFA அனுமதி பெற்றவர்கள் அமீரகம் திரும்பலாம் எனவும், அதேபோன்று அமீரக விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு இயக்கப்படும் சார்ட்டர் விமானங்கள் வாயிலாகவும் அமீரகம் திரும்ப செல்லுபடியாகும் அமீரக விசா வைத்திருப்பவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தை தொடர்ந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும், ஜூலை 12 முதல் 26 வரையிலான நாட்களில் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
INDIA to UAE – Flights are open for sale!
Bookings could be made through our website(https://t.co/5gsqA7aN1Q), call centre or authorized travel agents.
For more details, visit https://t.co/a2OKkJInpM @DGCAIndia @MoCA_GoI @FlyWithIX#ExpressUpdate #FlyWithIX #AirIndiaExpress pic.twitter.com/lmM9aDon1h
— Air India Express (@FlyWithIX) July 9, 2020
மேலும் விமானங்களுக்கான டிக்கெட் புக்கிங்கை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் வலைத்தளம் வாயிலாகவோ, கால் சென்டர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் (ICA) மூலம் அனுமதி பெற்ற அமீரக குடியிருப்பாளர்கள் மட்டுமே விமானங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் விமான நிறுவனம் வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் விமானங்களின் முழு பட்டியலை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. ஜூலை 15 முதல் 31 வரை அமீரகத்திற்கு இயக்கப்படவிருக்கும் மொத்த விமானங்களில் தமிழகத்திலிருந்து 9 விமானங்கள் அமீரகத்திற்கு இயக்கப்பட இருப்பதாகவும் அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து அமீரகம் செல்லும் அனைத்து விமானங்களும் சென்னை மற்றும் திருச்சியில் இருந்தே இயக்கப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலிருந்து அமீரகத்திற்கு இயக்கப்படவிருக்கும் விமானங்களின் விபரங்கள்…
Tentative flights schedule for the UAE from 15 – 31 July 2020 #VandeBharatMission Phase IV@AmbKapoor @cgidubai @airindiain @IndianDiplomacy pic.twitter.com/EVcvUmoQN9
— India in UAE (@IndembAbuDhabi) July 9, 2020