UAE : காலாவதியான ரெசிடன்சி விசா, எமிரேட்ஸ் ஐடியை புதுப்பிக்க கால அட்டவணையை வெளியிட்ட ICA..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த விசா தொடர்பான நடைமுறைகளில் திருத்தம் செய்யப்பட இருப்பதாக அமீரக அரசின் சார்பாக நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அந்த புதிய அறிவிப்பின் படி, மார்ச் 1 க்கு பின்னர் காலாவதியான விசாக்களுக்கும் மற்றும் நுழைவு அனுமதிக்கும் அளிக்கப்பட்டிருந்த விசா நீட்டிப்பதானது ரத்து செய்யப்படுவதாகவும், ஜூலை 12 முதல் அடையாளம் மற்றும் குடியிருமைக்கான பெடரல் ஆணையம் ஆவணங்களை புதிப்பித்தலுக்கான சேவைகளை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது அமீரகத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய காலாவதியான ரெசிடன்சி விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி வைத்திருக்கும் அமீரக குடிமக்கள், GCC நாட்டவர்கள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்கள் தங்களின் ஆவணங்களை புதுப்பித்துக்கொள்வதற்கான கால அட்டவணையை ICA வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணையின்படி, குறிப்பிட்ட மாதங்களில் காலாவதியான விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடியை வைத்திருப்போர் ICA வெளியிட்டுள்ள நாட்களிலிருந்து மட்டுமே ஆவணங்களை புதுப்பித்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் ரெசிடன்சி விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி காலாவதியாகியிருந்தால் அவர்கள் அனைவரும் நாளை முதல் அதாவது ஜூலை 12 முதல் ஆவணங்களை புதுப்பித்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.
- மே மாதத்தில் காலாவதியாகிய ரெசிடன்சி விசா, எமிரேட்ஸ் ஐடி வைத்திருப்போர் தங்களின் ஆவணங்களை புதுப்பித்துக்கொள்ள ஆகஸ்ட் 11 ஆம் தேதியிலிருந்து அனுமதிக்கப்படும்.
- ஜூன் மாதம் தொடக்கத்திலிருந்து ஜூலை மாதம் 11 ஆம் தேதி வரையிலான நாட்களில் காலாவதியான ரெசிடன்சி விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி வைத்திருப்பவர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 10 தேதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.
- ஜூலை மாதம் 11 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியாகும் ரெசிடன்சி விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடியை புதிப்பித்துக்கொள்ள குறிப்பிட்ட கால அவகாசம் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விசா பற்றிய தகவலில் காலாவதியான விசிட் விசா மற்றும் சுற்றுலா விசா பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The Federal Authority for Identity and Citizenship Resumes its Services to Customers.#ICA #UAE pic.twitter.com/cSQ87qWSjH
— Identity and Citizenship- UAE (@ICAUAE) July 11, 2020