UAE : பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கம்..!! தூதரகம் அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை முன்னிட்டு, அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் வரும் ஜூலை 15 முதல் அபுதாபி மற்றும் அல் அயினில் இருக்கக்கூடிய BLS சர்வதேச நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வரும் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
இருப்பினும், மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்), 12 வயதுக்கு கீழுள்ள சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோர் பாஸ்ப்போர்ட் சேவை மையங்களுக்கு நேரில் வருவதற்கு தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அனைத்து விண்ணப்பதாரர்களும் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ள சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் BLS மையங்களுக்கு வருகை தரும் போது முக கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும் என்றும் தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.