வளைகுடா செய்திகள்
வெளிநாட்டு ஊழியர்கள் அரசு துறையிலிருந்து தனியார் துறைக்கு மாறுவதற்கு குவைத் அரசாங்கம் தடை..!!

குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களின் ரெசிடென்ஸ் விசாக்களை அரசுத் துறையிலிருந்து தனியார் துறைக்கு மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மனிதவள பொது அதிகாரசபையின் பொது இயக்குநர் (General Director of the Public Authority of Manpower) அஹ்மத் அல் மூஸா அவர்கள் தெரிவிக்கையில், குவைத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை அரசாங்கத் துறையிலிருந்து, தனியார் துறைக்கு மாற்றுவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் சந்தையில் கூடுதல் கட்டுப்பாட்டை விதிப்பதை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த முடிவானது அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்திலிருந்து பயிற்சி பெறுவதற்கு உரிமம் பெற்ற மருத்துவ நிபுணர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.